அரசநகரிப்பட்டினத்தில் இருந்து கோபாலப்பட்டிணத்திற்கு பஸ்சில் சென்ற பெண்ணிடம் 25 பவுன் நகை திருட்டு! போலீசார் விசாரணை!!மீமிசல் அருகே பஸ்சில் சென்ற பெண்ணிடம் 25 பவுன் நகையை திருடி சென்ற மர்மநபரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் செய்யது அபுதாகிர். இவரது மனைவி பாத்திமா நாச்சியார் (வயது 28). இவர், நேற்று மீமிசல் அருகே உள்ள அரசநகரிப்பட்டினத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு விழாவிற்கு சென்றுவிட்டு அங்கிருந்து பஸ்சில் ஊர் திரும்பி கொண்டிருந்தார்.

பின்னர் கோபாலப்பட்டினம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி, கைப்பையை பார்த்த போது, அதில் இருந்த 25 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. 

இதுகுறித்து அவர் மீமிசல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments