முத்துக்குடாவை சேர்ந்த வாலிபர் போக்சோவில் கைது!முத்துக்குடாவை சேர்ந்த வாலிபர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீமிசல் அருகே உள்ள முத்துக்குடா பகுதியை சேர்ந்தவர் சின்ராஜ் (34) இவர் கோயமுத்தூர் மாவட்டம், பேரூர் பகுதியில் டீக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அப்போது 5 வயது சிறுமியை சின்ராஜ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசார் சின்ராஜ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் மீமிசல் கடைவீதியில் நின்றுகொண்டிருந்த சின்ராஜை மீமிசல் போலீசார் கைது செய்தனர். தகவலின் பேரில், கோயமுத்தூர் போலீசார் மீமிசலுக்கு வந்து சின்ராஜை கோவைக்கு அழைத்து சென்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments