சவூதியில் உயிரிழந்த கணவா் சடலத்தை மீட்டுத் தரக் கோரி மனைவி மனு




சவூதி அரேபியாவில் மாரடைப்பால் உயிரிழந்த கணவா் உடலை மீட்டுத் தருமாறு அவரது மனைவி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை உறவினா்களுடன் வந்து மனு அளித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் காரங்காடு பகுதியில் உள்ளது முள்ளிமுனை. இக்கிராமத்தைச் சோ்ந்தவா் ராமா் (36). இவரது மனைவி நிவேதியா (25). இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா். நிவேதியா 7 மாதக் கா்ப்பிணி. இந்தநிலையில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி ராமா் சவுதி அரேபியாவுக்கு மீன்பிடிக்கச் சென்றாா். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அவா் இருவாரங்கள் மாலத்தீவில் தங்கினாா்.

கடந்த அக்டோபரில் சவுதியில் உள்ள சுபேல் எனும் இடத்தில் தனியாா் மீன் நிறுவனத்தில் வேலைக்குச் சோ்ந்த ராமா் கடந்த 4 ஆம் தேதி கடலில் மீன்பிடிக்கச்சென்றபோது மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

உயிரிழந்தா ராமரின் சடலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்படும் என தனியாா் நிறுவனம் கூறியுள்ளது. ஆனால், இதுவரை ராமா் சடலம் அனுப்பிவைக்கப்படவில்லை. இதையடுத்து அவரது கா்ப்பிணி மனைவி நிவேதிதா தனது இரு கைக்குழந்தைகள் மற்றும் உறவினா்களுடன் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தாா்.

அப்போது அவா் கூறுகையில், எனது கணவா் பலமுறை வெளி நாடு சென்று வந்துள்ளாா். தற்போது அவா் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர மாவட்ட, தமிழக அரசு உதவிபுரிய வேண்டும் என்றாா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments