கோபாலப்பட்டிணத்தில் பல்வேறு இடங்களில் ஊராட்சி நிர்வாகம் சார்பாக சீமை கருவேல மரங்கள் மற்றும் குப்பைகள் அகற்றம்..! (படங்கள்)
கோபாலப்பட்டிணத்தில் பல்வேறு இடங்களில் ஊராட்சி நிர்வாகம் சார்பாக சீமை கருவேல மரங்கள் மற்றும் குப்பைகள் அகற்றம்..! (படங்கள்)

கோபாலப்பட்டிணத்தில் பல்வேறு இடங்களில் ஊராட்சி நிர்வாகம் சார்பாக சீமை கருவேல மரங்கள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம் நட்டாணிபுரசகுடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் முக்கியமான சாலையின் இருபுறங்களிலும் உள்ள சீமை கருவேல மரங்கள் மிகவும் அடர்த்தியாக வளர்ந்து  இருந்தது

நாட்டாணிபுரசகுடி ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாலட்சுமி கடந்த 11-10-2021 திங்கட்கிழமை அன்று கள ஆய்வு மேற்கொண்டு ஜேசிபி(JCB) இயந்திரத்தின் மூலமாக சாலையின் இருபுறமும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி சாலையை விரிவுபடுத்தினார். மேலும் அந்த பகுதியில் கிடந்த குப்பைகள் மற்றும் கோபாலப்பட்டிணம் சில பகுதிகளில் குவிந்திருந்த குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டது. 

* தோப்பிற்கு செல்லும் வழி

 * காவல் நிலையம் காட்டுக்குளம் சாலை

* ஸ்டேட் பாங்க் சாலை

 * நெடுங்குளம் சாலை மற்றும் ஹை ஸ்கூல் பகுதியிலிருந்து வரும் வாய்க்கால் தூர் வரப்பட்டது

கோபாலப்ட்டிணம் மக்களின் நலனில் அக்கறை கொண்டு சுகாதார நடவடிக்கைகளை செய்த  ஊராட்சி தலைவர் சீத்தாலட்சுமி அவர்களுக்கு
GPM மீடியா சார்பா வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Post a Comment

0 Comments