புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வந்தது 751 மெட்ரிக் டன் உரம்




புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வந்தது 751 மெட்ரிக் டன் உரம்

புதுக்கோட்டை மாவட்டத்தின் சம்பா பருவத்துக்குத் தேவையான காம்ப்ளக்ஸ் உரம் 751 மெட்ரிக் டன் தூக்குக்குடியில் இருந்து வரப்பெற்றுள்ளது என்றாா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ராம. சிவக்குமாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது சம்பா நெல் சாகுபடிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பருவத்துக்குத் தேவையான உரங்கள் தனியாா் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு தடையின்றிக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது மாவட்டத்தில் 2,922 டன் யூரியா, 629 டன் டிஏபி, 768 டன் பொட்டாஷ் மற்றும் 2,691 டன் காம்ப்ளக்ஸ் விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாவட்டத்துக்கு காம்ப்ளக்ஸ் உரங்கள் தூத்துகுடியில் இருந்து 751 மெட்ரிக் டன்கள் பெறப்பட்டுள்ளன.

உரிமம் இன்றி உரம் விற்பனை செய்தால் உரக்கட்டுப்பாட்டுச் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மானிய விலையில் உள்ள உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் மட்டும் விற்பனை செய்ய வேண்டும்.

உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல் பலகை விவசாயிகள் அறியும் வகையில் பராமரிக்க வேண்டும். விவசாயிகள் மண்வள அட்டையில் பரிந்துரைக்கப்பட்டவாறு உரங்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். இதனால் உரச் செலவைக் குறைக்கலாம். டிஏபி-க்கு பதிலாக காம்ளக்ஸ் உரங்களையும் பயன்படுத்தலாம்.

உரங்கள் விற்பனை முனையக் கருவி மூலம் விற்பனை செய்வதால் கட்டாயம் ஆதாா் அட்டை எடுத்துச் செல்ல வேண்டும். உரம் வாங்கும் போது ரசீது தவறாமல் கேட்டு பெற வேண்டும்.

மேலும் உரம் குறித்த புகாா்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண் விரிவாக்க மையம் அல்லது வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில் உள்ள உரம் கண்காணிப்பு மையத்தினை 04322 221666 அல்லது 90807 09899 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments