புதுக்கோட்டை ரயில் பயணிகளின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றிய புதுக்கோட்டை ராஜ்யசபா எம்பி M.m. அப்துல்லா
புதுக்கோட்டை இரயில்நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு ரயில் வரும் நேரங்களில் பயணிகள் வந்து செல்வதற்கு தொடர்ச்சியாக பேருந்துகளை இயக்க கோரி பல்வேறு காலகட்டங்களில் ரயில் பயணிகள் வலியுறுத்தி வந்த நிலையில்...புதுக்கோட்டை ராஜ்யசபா எம்பி M.m. அப்துல்லா அவர்கள் பயணிகளின் கோரிக்கைகளை ஏற்று பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொண்டார்...

இந்த முயற்சியின் அடிப்படையில் தொடக்க விழா நிகழ்ச்சி புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நேற்று அக்டோபர் 24 மாலை 05:15 மணிக்கு  நடைபெற்றது.


இரயில் வந்து செல்லும் நேரங்களில் தொடர்ச்சியாக பேருந்து சேவையை  தொடங்கி வைத்தார், 
அவருடன் திமுக கழக நிர்வாகிகள் போக்குவரத்து கழக அதிகாரிகள் ரயில் நிலைய அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments