கிராம சபை கூட்டங்கள் பெயரளவில்தான் நடத்தப்பட்டுள்ளன - ஆய்வில் தகவல்




அறப்போர் இயக்க மாநில குழு உறுப்பினர் மா.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2-ந்தேதி நடத்தப்பட்ட கிராமசபை கூட்டங்கள் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்டதா? என்பதை அறிய இணையவழி ஆய்வை அறப்போர் இயக்கம் மேற்கொண்டது. இதில், 431 ஊராட்சிகளில் இருந்து 535 பேர்கள் ஆய்வில் பங்கேற்று பதில்களை தெரிவித்துள்ளனர்.


கிராம சபை விதிகள் பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை என்பதும், பல ஊராட்சிகளில் அது வெறும் பெயரளவில் தான் நடத்தப்படுகிறது என்பதும், ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. தீர்மான புத்தகம் கொண்டு வரவில்லை என 43 சதவீதம் ஊராட்சிகளிலும், மக்கள் கூறும் பிரச்சினைகளை தீர்மான புத்தகத்தில் எழுதுவதில்லை என 59 சதவீதம் ஊராட்சிகளிலும், வரவு-செலவு படித்து காண்பிக்கப்படவில்லை என 63 சதவீதம் ஊராட்சிகளிலும் தெரிவித்துள்ளனர். 

வருகிற ஜனவரி 26-ந்தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் இந்த குறைபாடுகளை களைந்து விதிமுறைகளுக்கு உட்பட்டு கூட்டத்தை நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments