நாட்டாணி புரசக்குடி கிராம நிர்வாக அலுவலரை மாற்றக்கோரி எஸ்டிபிஐ கட்சி சார்பாக நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் நிறுத்தி வைப்பு, வட்டாட்சியர் உடன் நடந்த சமாதானப் பேச்சு வார்த்தையில் உடன்பாடு
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் வட்டம், நாட்டாணி புரசக்குடி
1. கிராம நிர்வாக அலுவலர், கிராம அலுவலகத்திற்கு வருவதில்லை, பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே
2. நாட்டாணி புரசக்குடி கிராம அலுவலரை மாற்றக் கோரியும்
3. பணி செய்யும் நிரந்தர கிராம அலுவலர் வேண்டியும்
4. மக்கள் அவதி போக்க வேண்டியும்
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சார்பாக 26/10/2021 அன்று மீமிசல் பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டம் SDPI கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டது.
இது சம்பந்தமாக ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில், மீமிசல் வருவாய் ஆய்வாளர் அவர்கள் முன்னிலையில் 22/10/2021 நேற்று மதியம் 3:00 மணி அளவில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை செய்யப்பட்டது.
எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக மேற்சொன்ன நான்கு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
கிராம நிர்வாக அலுவலரிடம் விசாரித்தபின், விசாரணையின் முடிவாக
1. VAO பாலமுருகன் காலை 10 மணி முதல் 2 மணி வரை பொதுமக்களின் கோரிக்கைகளுக்காக அலுவலகத்தில் பணியில் இருக்க வேண்டும்
2. புகார்களுக்கு இடமின்றி தொடர்ந்து அலுவலகத்தில் பணிபுரிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அவ்வாறு தினந்தோறும் காலை 10 மணி முதல் 2 மணி வரை அலுவலகத்தில் இருப்பேன் என்றும், வேறு அலுவல் நிமித்தமாக வெளியே செல்ல வேண்டி இருந்தால் மட்டுமே வெளியே செல்வேன் என்றும், இல்லையெனில் அலுவலகத்தில் பணியில் இருப்பேன் என்றும் எனவும் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இனிவரும் காலங்களில் நடந்து கொள்ளவில்லை எனில் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக 26-10-2021 காலை 10 மணியளவில் நடைபெற இருந்த போராட்டம் கைவிடப்பட்டது.
இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டு கையொப்பம் இட்டனர்
இந்த சமாதான கூட்டத்தில் SDPI கட்சி சார்பாக கலந்துகொண்ட நபர்கள்
ஆவுடை சதாம் மாவட்ட செயற்குழு உறுப்பினர், புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சாகுல் ஹமீது தொகுதி செயற்குழு உறுப்பினர் அறந்தாங்கி தெற்கு தொகுதி மகிழ்ச்சி S. முகம்மது யாசின் தொகுதி தலைவர் அறந்தாங்கி தெற்கு தொகுதி சேக் அப்துல்லா நகர செயலாளர்,மீமிசல் நகரம் சேக் பரீது கிளைச் செயலாளர், கோபாலபட்டினம்
மற்றும் இந்த சமாதான கூட்டத்தில் ஆவுடையார்கோவில், தேர்தல் துணை வட்டாட்சியர் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
என்றென்றும் மக்கள் பணியில்
SDPI கட்சி
மீமிசல் நகரம்
அறந்தாங்கி தெற்கு தொகுதி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.