கோட்டைப்பட்டினத்தில் தமுமுக சார்பாக நடைபெற இருந்த ATM இழுத்து மூடும் போராட்டம் கைவிடப்பட்டது.




கோட்டைப்பட்டினத்தில் தமுமுக சார்பாக நடைபெற இருந்த ATM இழுத்து மூடும் போராட்டம் கைவிடப்பட்டது.

வட்டாட்சியர் உடன் நடந்த சமாதானப் பேச்சு வார்த்தையில் உடன்பாடு


புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா, கோட்டைப்பட்டினத்தில் தமுமுக சார்பாக அறிவிப்பு செய்து இருந்த இரண்டு (ஐசிஐசிஐ, யூனியன் பேங்க்) ATM மையங்கள் சரியாக செயல்படவில்லை என்று இழுத்து மூடி பூட்டு போடும் போராட்டம் 01-11-2021 (திங்கட்கிழமை) நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது

இந்த போராட்டம் சம்மந்தமாக நேற்று 30-10-2021 (சனிக்கிழமை) மாலை 4:00 மணியளவில் மணமேல்குடி வட்டாட்சியர் (அலுவலகம்) தலைமையில் சமாதான கூட்டம் ஏற்ப்பாடு செய்யப்பட்டது. இந்த சமாதான கூட்டத்தில் யூனியன் பேங்க் மேலாளர், ஐசிஐசிஐ பேங்க் கிளை மேலாளர், கோட்டைப்பட்டினம் சரக வருவாய் ஆய்வாளர் மற்றும் கொடிகுளம் வட்ட கிராம நிர்வாக அலுவலர், காவல்துறை தலைமை காவலர் மற்றும் தமுமுக சார்பாக மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

சமாதான கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது._

 யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கோட்டைப்பட்டினம் கிளையின் ATM ஆனது 02-11-2021 செவ்வாய்கிழமை காலை முதல் செயல்படும் எனவும், கூடுதலாக வரக்கூடிய நிதியாண்டில் புதிதாக மற்றொரு Deposit ATM அமைக்கப்படும் என்று மேலாளரால் தெரிவிக்கப்பட்டது.

 இரண்டு வங்கி ATM மையங்களிலும் தினசரி பணம் வைக்கப்படும் எனவும் மேலாளர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேற்கண்ட முடிவுகளை ஏற்று 01-11-2021 அன்று நடக்க இருந்த ATM இழுத்து மூடும் போராட்டம் கைவிடப்பட்டது.

என்றும் அனைத்து சமுதாய மக்கள் நலனில்

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்,
மனிதநேய மக்கள் கட்சி,
கோட்டைப்பட்டினம் கிளை.
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments