கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் அறுந்து விழுந்த மின்கம்பி சரி செய்யப்பட்டது


கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில்  அறுந்து விழுந்த மின்கம்பி சரி மின்சார‌ ஊழியர் சரி செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசலை அடுத்த கோபாலப்பட்டிணம்  அவுலியா நகர் பள்ளிவாசல் அருகில் காய்ந்த தென்னை மட்டை  விழுந்து மின் கம்பி இன்று 28/10/2021 வியாழக்கிழமை நண்பகல் சுமார் 12:15 மணியளவில் அறுந்து விழுந்தது.மேலும் மின் கம்பி அறுந்து விழும் நேரத்தில் அருகில் யாரும் இல்லாத காரணத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

பின்பு பொதுமக்கள் அளித்த தகவலையடுத்து மின்சார ஊழியர்கள் நிகழ்விடத்துக்கு வந்து மின் வயர்களை சரி செய்தனர்.பிறகு அவுலியா நகர் பகுதிக்கு மதியம் 3 மணியளவில் மின்சாரம்  விநியோகம் செய்யப்பட்டது.

மின்சாரம் வந்ததையடுத்து அவுலியா நகர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

உடனடியாக மின்கம்பியை சரி செய்த ‌மின்சார  ஊழியர்களுக்கு அவுலியா நகர் பொதுமக்கள் & GPM மீடியா சார்பாக வாழ்த்துக்கள் & நன்றியை தெருவித்து கொள்கிளோறோம்

கோபாலப்பட்டிணம்   பொதுமக்களுக்கு GPM மீடியாவின் அன்பான வேண்டுகோள் :

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்  கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே  கிழக்கு கடற்கரை சாலை ( ECR ) பகுதியில் இயற்கை மற்றும் சுகாதாரம் சூழ்ந்த எழில்மிகு அழகிய கிராமமாக 
 நமது ஊர் கோபாலப்பட்டிணத்தில் உள்ள வீடுகளில் வளர்ந்திருக்கும் மரங்களின் கிளைகள் மின்கம்பிகளில் உரசிக்கொண்டிருக்கிறது. இதனால் அடிக்கடி மின்பழுது ஏற்பட்டு மின்சாரம் தடைபடுகிறது. 

எனவே உங்கள் வீடுகளில் உள்ள மரங்களின் கிளைகள் மின்கம்பியில் உரசும்படி இருந்தால் அதை உடனடியாக அகற்றுமாறு  GPM மீடியா சார்பாக கேட்டுக்கொள்கிறோம்

நமது ஊர் கோபாலப்பட்டிணத்தை  சேர்ந்த வெளிநாடு வாழ்,வெளியூர் வாழ் மற்றும் உள்ளூர் வாழ் சகோதரர்கள் தங்கள் குடும்ப உறவுகளிடம் இந்த செய்தியை பகிர்ந்து அறிவுரைகள் வழங்கவும் கேட்டுக்கொள்கிறோம்.

ஊர் அக்கறையுடன்....


GPM மீடியா குழு,
கோபாலப்பட்டிணம்.
மீமிசல்
ஆவுடையார் கோவில் தாலுகா
புதுக்கோட்டை மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments