புதுக்கோட்டை அருகே ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் வரவு செலவுத் திட்டத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!



புதுக்கோட்டை 9 ஏ நத்தம்பண்ணை ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் ஊராட்சியின் வரவு செலவுத்திட்டத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நேற்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் ஒன்றியத்தை தவிர மற்ற ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்தநிலையில் புதுக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட 9 ஏ நத்தம்பண்ணை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாபு தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

இதில் அந்த ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கொரோனா காலத்தில்  பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் சூரணம் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அரசு சார்பில் தான் கபசுர குடிநீர் சூரணம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஊராட்சி வழங்கியதாக கணக்கிடப்பட்டுள்ளது என்று வாதம் செய்தனர். கணக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கூறினர்.


இது போன்ற பல்வேறு விஷயங்களில் வரவு செலவு கணக்கு குளறுபடி இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.  உடனடியாக தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர்  வரவு செலவுக்கு உரிய ஆதாரம் சமர்ப்பிக்கப்படும் என்று கூறினார் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments