கண்ணியமிகு கோபாலபட்டிணம் ஜமாத் பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு


கண்ணியமிகு கோபாலபட்டிணம் ஜமாத் பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

அண்மைகாலமாக நமது ஊரில் நடைபெறும் திருமணங்களில் நமது ஜமாத்தின் கண்ணியத்தை சீர் குலைக்கும் வகைகளில் ஓர் சிலர் நடக்கின்றனர். மோட்டார் வாகனங்களில் சைலன்சரை கழட்டி அதிகபடியான சப்தத்தை ஏற்படுத்துகின்றனர். வெடி வெடிப்பது

ஹாரன்களை விடாமல் அடிப்பது, மணமகன் வருகையின் போது கூச்சலிடுவது போன்ற அனாச்சாரங்களில் ஈடுபடுகின்றனர். இது பொதுமக்களிடையே முகம் சுழிக்கும் வகையிலும், வெளியூர் ஜமாத்தார்கள் பார்வையில் நமது ஜமாத் மாண்பினை குறைக்கும் வகையிலும் உள்ளதாலும், இனிமேல்கொண்டு இது போன்ற செயல்கள் நடைபெறும் திருமணங்களில் ஜமாத்தார்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

2) நமது ஊரில் நடைபெறும் கட்டுமானங்களின் வேலை ஆட்கள் மாலை 6.00 மணிக்கு மேல் அங்கு மற்றும் நமது ஊரின் எந்த பகுதியிலும் தங்கவைக்க கூடாது. மேலும் அந்த வேலையாட்கள் மூலமாக ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு கட்டிட உரிமையாளரே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

3) பழைய வீடுகளை இடித்து புது வீடு கட்டும் பொதுமக்கள், தங்களின் பழைய வீடுகளை இடிக்கும் முன்னரே ஜமாத்தார்களிடம் நேரில் தெரிவிக்க வேண்டும். மேலும் அவர்கள் தாங்களின் தாய் சுவரில்தான் கட்ட வேண்டும். வெளியில் உள்ள திண்ணையை உரிமைகொண்டாடகூடாது. மேலும் தாங்களின் எல்லைக்கு உள்ளையே படி, மதில் ஆகியவைகளை அமைத்துக்கொள்ள வேண்டும். வெளியில் எந்தவித ஆக்கிரமிப்பையும் செய்யக்கூடாது.

மேலும் விவரங்களுக்கு ....

தலைவர்கள் : 98424 95656, 94426 45371

து.தலைவர் : 80986 59390

செயலாளர் : 97874 50007

இ.செயலாளர் : 75022 44444

து.செயலாளர் : 98656 48673

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments