அதிரை பகுதியை கலக்கும் ரயில் பயண சுற்றுலா


வேலையின்மை, விலைவாசி உயர்வு, ஊரடங்கு என கடுமையாக பாதிக்கபட்டிருந்த மக்களுக்கு வரபிரசாதமாக நீண்ட நெடுங்காலமாக நிறுத்தி வைக்கபட்டிருந்த திருவாரூர் காரைக்குடி இடையேயான ரயில் போக்குவரத்து தற்போது செயல்பட தொடங்கியுள்ளது.

கேட்கீப்பர்கள் இன்னும் நியமிக்கபடாததால் அவ்வழியே இயக்கபடும் ரயில் மிகு குறைவான வேகத்தோடு அதிக நேரம் எடுத்து இலக்கை அடைவதால் இந்த ரயிலில் பயணித்து இரு பக்கமும் இருக்ககூடிய வயல்கள், காடுகள், ஆறுகள் என இயற்கையை ரசித்துகொண்டே ரம்மியமாக பயணிக்கலாம்.

இதை விரும்பியே அதிரை பகுதி மக்கள் காரைக்குடி வரை பயணித்து அங்கிருந்து திரும்ப அதிரைக்கு திரும்புவதை சுற்றுலாவை போன்று மிக குறைந்த செலவில் சென்று வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments