மணமேல்குடி அடுத்த கிருஷ்ணாஜிபட்டினம் பகுதியை சேர்ந்தவர் பைசல்முகம்மது. இவர் நேற்று காரில் கிருஷ்ணாஜிபட்டினம் கடைவீதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நாகப்பட்டினத்திலிருந்து சரக்கு ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக கார் மீது மோதி, அருகிலிருந்த டீ கடைக்குள் லாரி புகுந்தது.
இதில் டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த முகம்மது ரசாக் (வயது 65) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். முத்துக்குமார் என்பவர் படுகாயமடைந்தார்.
மேலும் லாரி மோதியதில் காருக்குள் இருந்த பைசல் முகம்மது, ஹபீப் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்த மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல்ஞானம், தாசில்தார் ராஜா மற்றும் அதிகாரிகள் ஆகியோர் விரைந்து வந்து சரக்கு லாரியை அப்புறப்படுத்தி படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே போலீசார் விபத்தில் பலியான முகம்மது ரசாக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மணமேல்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.