25,000 ரூ வேண்டுமா? பள்ளிக் கல்வித் துறை சூப்பர் அறிவிப்பு!



இல்லம் தேடிக் கல்வி திட்டத்துக்கான சின்னம் (Logo with Tag Line) உருவாக்கினால் ரூ.25,000 பரிசு என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் 1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி செல்லும் நேரத்துக்குப் பின்னர் வசிப்பிடத்திற்கு அருகில் சிறு,சிறு குழுவாக ஒருங்கிணைத்து கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.இந்தத் திட்டத்தில் சேவையாற்ற விருப்பமுள்ள 38 மாவட்டங்களில் உள்ள தன்னார்வலர்கள் அனைவரும் தங்கள் விவரங்களை  illamthedikalvi.tnschools.gov.in இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்துக்கான லோகோ மக்கள் பங்கேற்புடன் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக லோகோ (logo with tag line) உருவாக்கும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ''அனைத்து பள்ளி, கல்லூரி, ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் பங்கேற்கலாம் வயது வரம்பு இல்லை.

போட்டியாளர்கள் தங்களின் படைப்பினை illamthedikalvi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் அக்டோபர் 24ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

போட்டியாளர்களால் தயாரித்து வழங்கப்படும் லோகோ ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்தால் இறுதி செய்யப்படும்.

சிறந்த மற்றும் பொதுமக்களுக்கு எளிதில் புரிந்திடும் வகையிலான சின்னத்தை உருவாக்கும் ஒரு வெற்றியாளருக்கு ரூ.25,000 பரிசு மற்றும்  பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments