மணமேல்குடி அருகே பழுதாகி நின்றிருந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்: தொழிலாளி உயிரிழப்புமணமேல்குடி அருகே பழுதாகி நின்றிருந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே வேட்டணிவயல் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 40). தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மணமேல்குடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் கட்டுமாவடி நோக்கி சென்று கொண்டிருந்தார். 

அப்போது மணமேல்குடியில் சாலையோரம் பழுதாகி நின்றிருந்த டிராக்டரில் எதிர்பாராதவிதமாக ராஜா ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே ராஜா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த மணமேல்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments