அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாளில் கிராம சபைக் கூட்டங்களை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நேற்று கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. அதில் மக்கள் பல்வேறு விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்களை நிறைவேற்றினர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் 2.10.2021 சனிக்கிழமை காலை 11.25 மணியளவில் முத்துக்குடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ஊராட்சிமன்ற தலைவர் திருமதி.ரா.சீதாலெட்சுமிMSc,.BEd., தலைமையிலும், திருமதி.பிரியாகுப்பு ராஜா ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் அவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் திருமதி.கமர்நிஷா அபுதாஹீர் அவர்கள், திரு.பெ.ரமேஷ் அவர்கள், மு.உதயகுமார் ஆகியோரின் முன்னிலையிலும் நடைபெற்றது.
கூட்டத்தில் ஒன்றிய அலுவலர்களும், ஊராட்சி உறுப்பினர்களும் சுகாதாரதுறை பணியாளர்கள் சத்துணவு அமைபாளர்கள், ஊர் பொதுமக்கள், ஊர் நிர்வாகத்தினர், பெரியவர்கள், ஊர் வளர்ச்சியில் அக்கறை கொண்ட இளைஞர்கள் இதில் அதிகமாக கலந்து கொண்டனர்.
சமூக ஆர்வலர் கூறுகையில், கிராம சபையில் அரசு அறிவித்த எந்த ஒரு அஜெண்டாவும் விவாதிக்கப்படவில்லை. வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யவில்லை. ஊராட்சியின் 31 வகையான ஆவணங்கள் வைக்கப்படவில்லை. சுமார் 8000 ஆயிரம் வாக்காளர்களை கொண்ட ஊராட்சியில் சரியான குறைவெண்னில் பொதுமக்கள் கலந்து கொள்ளவில்லை. ஆகவே இந்த கிராம சபை தீர்மானத்தை ரத்து செய்து விட்டு சிறப்பு கிராம சபை நடத்தப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.