தொடரும் மழை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நவ.10ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை 8 மணி முதல் இதுவரையில் விடாமல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை 10 தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்திருக்கிறார். 

இம்மாவட்டத்தில் இந்த ஆண்டு பெய்துவரும் கனமழையால் இதுவரையில் 350 கண்மாய் மற்றும் குளங்கள் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 1300 குளங்கள் மற்றும் கண்மாய்கள் 99 சதவீதம் நிறைந்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments