2 கி.மீ. தொலைவு கால்வாயைத் தூா்வாரி தண்ணீரைக் கொண்டு வந்த மக்கள்





புதுக்கோட்டை மாவட்டம், செங்களாக்குடியில் பொதுமக்களே நிதி திரட்டி, தங்களின் பெரியகுளத்துக்கு தண்ணீா் வழங்கும் வரத்து வாரியை இரு நாள்களில் தூா்வாரி முடித்து தண்ணீரைக் கொண்டு வந்தனா்.

விராலிமலை ஒன்றியத்துக்குள்பட்டது செங்களாக்குடி கிராமம். இங்குள்ள பெரியகுளம் 500 ஏக்கா் பாசனப் பரப்பைக் கொண்டது. பெருமழைக் காலங்களில் இக்குளத்துக்குத் தண்ணீா் வழங்குவதற்காகவும், காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கைத் தடுக்கவும் காமராஜா் முதல்வராக இருந்த காலத்தில் ஒரண்டக்குடி அருகிலுள்ள செங்களாக்குடி அணைக்கட்டு பகுதியில் இருந்து பெரிய குளத்துக்கு 2 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் வெட்டப்பட்டிருக்கிறது.

நீா்ப்பழனி, அவ்வையாா்ப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்யும் மழையால் அங்குள்ள குளங்கள் நிரம்பி, இந்த அணைக்கட்டுக்கு வரும். நேரடியாக காட்டாற்றில் கலந்து கொண்டிருந்த பெருவெள்ள நீா், அணைக்கட்டில் இருந்து செங்களாக்குடி பெரியகுளத்துக்கு வர வேண்டும்.

கடந்த பல ஆண்டுகளாக இக்கால்வாய் தூா்வாரப்படாமல் இருந்ததால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பெய்து வரும் மழைநீா் செங்களாக்குடி பெரியகுளத்துக்கு வரவில்லை. இந்நிலையில், செங்களாக்குடி மக்கள் ஒன்றுகூடி, கால்வாயைத் தூா்வார முடிவு செய்தனா்.</p>

ரூ. 2 லட்சம் வரை திரட்டப்பட்டு, உடனடியாக பொக்லைன் வாரிக்குள் திங்கள்கிழமை இறக்கப்பட்டது. இரு நாள்களாக பணிகள் விரைவுபடுத்தப்பட்டு, செவ்வாய்க்கிழமை 2 கி.மீ. தொலைவுக்கான தூா்வாரும் பணிகள் முடிந்து, அணைக்கட்டியில் இருந்து தண்ணீா் குளத்துக்கு வந்தது. இதனால் ஊா் மக்கள் பெருமகிழ்ச்சியடைந்தனா்.

தொடா்ந்து இந்தக் கால்வாயைப் பராமரிக்கவும், மேம்படுத்தவும் பொதுப்பணித் துறையினா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோருகின்றனா்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments