சவுதியில் இறந்தவரின் உடலை எஸ்.டி.பி.ஐ கட்சி மற்றும் இந்தியன் சோசியல் ஃபோரம் உதவியால் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு.


இராமாநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாலுகா முள்ளிமுனையை சேர்ந்த ராமர் (35)  என்பவர் சவுதி அரேபியா ஜீபைல் என்ற பகுதியில் மீன்பிடி தொழிலுக்காக பணிபுரிந்து வந்த இந்த நிலையில் கடந்த 04/9/2021 அன்று மாரடைப்பால் சவுதியில் மரணமடைந்தார். அவருடைய மனைவி கலைநிவேதிகா மற்றும் அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர்

இதனையடுத்து அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர ஒரு மாத காலம் அவரது வீட்டார்கள் பல கட்ட முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர் அது பயனளிக்கவில்லை. இந்நிலையில் இந்த செய்தியறிந்து எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளரும் மக்கள் தொடர்பு அதிகாரியுமான(PRO) நஜ்முதீன் அவர்கள் தலைமையில் தொகுதி மற்றும் நகர் நிர்வாகிகள் அந்த குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் இறந்தவரின் மனைவி(கலைநிவேதிகா) முள்ளிமுணை ஊராட்சித் தலைவர் அமிர்தவல்லி, முள்ளிமுணை முன்னாள் ஊராட்சியின் நிர்வாகிகள் ரவீந்திரன் மற்றும் அண்ணாதுரை மற்றும் அவர்களது உறவினர்கள் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் நஜ்முதீன் அவரிடத்தில் இறந்தவரின் உடலை பெற்றுத்தருமாறு மனு அளித்தனர், மனுவை பெற்றுக்கொண்ட நிர்வாகிகள் உடனடியாக ஏற்பாடு செய்து தருவதாக வாக்குறுதி அளித்தனர். அதனடிப்படையில் உடனே ஜீபைல் பகுதியை சேர்ந்த இந்தியன் சோஷியல் ஃபோரம் (ISF) நிர்வாகிகளை தொடர்பு கொண்டு செய்தியை கூறி உடலை பெற்றுத்தர வேண்டும் என்றனர்.

இராமநாதபுரம்(கிழக்கு) மாவட்ட எஸ்டிபிஐ நிர்வாகிகள் மற்றும் சோஷியல் ஃபோரம் எடுத்த தொடர் முயற்சியின் பலனாகவும் இந்திய தூதரகத்தின் உதவியினாலும் இறந்த ராமரின் உடலை தாயகத்திற்கு 2021 நவம்பர் 09ஆம் தேதி ஷிலங்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் திருச்சி விமான நிலையத்திற்கு காலை 10 மணியளவில் வந்தடைந்தது.

உடலைப் பெற்று குடும்பத்தாரிடம் ஒப்படைப்பதற்காக இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் திருவாடானை வடக்கு தொகுதி தலைவர் சலாமத் அலி தலைமையில் செயலாளர் ரிஸ்வான், சமூக ஊடக அணி மாவட்ட செயலாளர் முஜாஹித் ஆகியோர் திருச்சி விரைந்தனர் அங்கு எஸ்டிபிஐ கட்சியின் திருச்சி(வடக்கு) மாவட்ட தலைவர் முபாரக் அலி அவர்களின் தலைமையில் தெற்கு மாவட்ட பொதுசெயலாளர் நியமத்துல்லா, செயலாளர் ஏர்போர்ட் மஜீத், பொருளாளர் சுஹைபு, ஆகிய நிர்வாகிகள் உதவியோடு அவருடைய உடலை பெற்று சொந்த ஊருக்கு எடுத்து செல்ல அனைத்து உதவிகளை செய்து எஸ்.டி.பி.ஐ  ஆம்புலன்ஸ் மூலம் ஊருக்கு கொண்டு சென்று குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர். 

அவரது இறுதி ஊர்வலத்தில் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் சோமு அவர்கள் தலைமையில் மாவட்ட துணைத் தலைவர் சுலைமான், பொதுச் செயலாளர் ஜமீல், செயலாளர்கள் ஆசாத், ஹனீப் ஆகியோர் பங்கெடுத்து ஆறுதல் கூறினார்கள், பின்னர் அவர்களின் குடும்பத்தார்கள் கண்ணீர்மல்க SDPIகட்சியின் நிர்வாகிகள் மற்றும் இந்தியன் சோசியல் ஃபோரம் நிர்வாகிகளுக்கு நன்றியினை தெரிவித்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments