புதுக்கோட்டை மாவட்டத்தில் கன மழை - 458 கண்மாய்கள் முழு கொள்ளளவை எட்டின :


புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் 458 கண்மாய்கள் முழுமையாக நிரம்பியுள்ளதாக மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

வடகிழக்குப் பருவமழையை யொட்டி புதுக்கோட்டை மாவட் டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் குறித்து ஆட்சியர் அலுவ லகத்தில் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நேற்று இரவு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில, மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலரும், சமூக நலத் துறை அரசு முதன்மை செயலாளருமான ஷம்பு கல்லோலிகர் ஆகியோர் பங்கேற்று மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியது:

மாவட்டத்தில் இதுவரை 1.82 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில், இதுவரை 1.45 லட்சம் ஏக்கருக்கு விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர். விடுபட்டுள்ள விவசாயிகள் விரைந்து காப்பீடு செய்துகொள்ளலாம். மழையால் தற்போது வரை சுமார் 50 ஏக்கரில் நெற் பயிர்கள் அழுகி பாதிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,131 கண்மாய்களில் 458 கண் மாய்கள் முழுமையாக நிரம்பி யுள்ளன.

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள அலுவலர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட் டுள்ளது. மாவட்டத்தில் 457 பாது காப்பு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. 103 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இயற்கை சீற்றம் வருவது இயல்பானது. அதில், ஒரு உயிரிழப்புகூட ஏற்படக்கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது.

ஆபத்தான நீர்நிலைகளில் சிறுவர்கள் குளிப்பதைத் தடுக்குமாறு காவல் துறையி னருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை, 114 வீடுகள் பகுதியளவும், 98 வீடுகள் முழுமை யாகவும் சேதம் அடைந்துள்ளன என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments