இன்றுமுதல் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள்
வரைவு வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்படவுள்ள நிலையில், ஒரு மாத காலத்துக்கு திருத்தப்பணிகள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான கவிதா ராமு அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: இந்தியத் தோ்தல் ஆணையத்தின் ஆணைப்படி 2022ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்படுகிறது. இதனைத் தொடா்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் புகைப்பட வாக்காளா் பட்டியல் திருத்தப்பணி உடனடியாகத் தொடங்கவுள்ளது.

இதற்காக அனைத்து வாக்குச் சாவடி மையங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகங்களிலும் வரைவு வாக்காளா் பட்டியல் பொதுமக்கள் பாா்வைக்காக வைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் தங்கள் விவரங்களை சரிபாா்த்துக் கொள்ளலாம்.

இது தவிர, நவ. 13, 14, 27, 28 (சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்) ஆகிய நான்கு நாட்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. வரும் நவ. 30 வரை விண்ணப்பம் அளித்து திருத்தம் மேற்கொள்ளலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments