கடலில் படகு கவிழ்ந்ததில் மாயமான கோட்டைப்பட்டினம் மீனவர்: கடலோர பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் தேடும் பணியில் தொய்வு!



கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து நாட்டு படகு மூலம் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த மணிமுத்து மற்றும் கணேசன் ஆகிய இருவரும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

கடலில் சூறைக்காற்று வீசிய காரணத்தினால் படகு கடலுக்குள் மூழ்கியது இந்நிலையில் படகில் சென்ற கணேசன் என்பவரை மட்டும் அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் பத்திரமாக மீட்டனர். மற்றொரு மீனவரான மணிமுத்துவை காணவில்லை. தொடர்ந்து மீனவர்கள் மணிமுத்துவை தேடி வந்தனர். ஆனால் மணிமுத்து கிடைக்கவில்லை. 

இந்நிலையில் 4-வது நாளாக மாயமான மணிமுத்துவை தேடும் பணியில் மீனவர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். நான்கு நாட்களாகியும் மீனவரை கண்டுபிடிக்காததால் உறவினர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீனவரை தேடி கண்டுபிடித்து தர வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது கடல் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாயமான மீனவரை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது என்று கூறினார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments