மணமேல்குடியில் 11 பள்ளிகளில் தேசிய அடைவு ஆய்வு தேர்வுபுதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்தில் 3,5,8 மற்றும் 10 ம் வகுப்புகளுக்கு தேசிய அளவிலான அடைவுத்திறன் தேர்வு 11 பள்ளிகளில் நடைபெற்றது.

மாணவர்களின் கொரனா பெரும்தொற்று காலத்தில் கற்றல் இழப்பீடை ஈடுசெய்யும் விதமாக தேர்வு அமைந்தது.மூன்றாம் வகுப்பு ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அதிகபட்சமாக 30 மாணவர்கள் வீதம் இத்தேர்வு நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி வழிகாட்டலில் மணமேல்குடி ஒன்றிய பள்ளிகளில் நடைபெற்ற தேர்வு மையங்களை வட்டார கல்வி அலுவலர் திரு முத்துக்குமார் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராமன், வேலுச்சாமி, அங்கயற்கண்ணி ஆகியோர் பார்வையிட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments