ஆவுடையார்கோவிலிலிருந்து நாகுடி செல்லும் சாலையில் பிரிந்து நெட்டியேந்தல் கிராமத்திற்கு தார்ச்சாலை செல்கிறது. அந்த சாலை கீழச்சேரி வழியாக துரையரசபுரம் வரை செல்கிறது.
தார்ச்சாலை நீண்ட நாட்களுக்கு முன்பு போடப்பட்டது. குருவாவெட்டி கண்மாய் குறுக்கே தார்சாலை செல்கிறது. அந்த சாலையை பனையவயல் கிராமத்தை சேர்ந்த சிலர் மீன்வளர்ப்பிற்காக நள்ளிரவில் பொக்லைன் எந்திரத்தை வைத்து சாலையின் குறுக்கே வெட்டியதாக நெட்டியேந்தல் கிராம மக்கள் ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும், ஆவுடையார்கோவில் போலீசாரிடமும் மனு அளித்தனர்.
இந்த சாலை உடைக்கப்பட்டதால் பள்ளத்தில் தண்ணீர் செல்வதால் அந்த சாலைவழியாக எந்த வாகனமும் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால் நெட்டியேந்தல் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் ஆவுடையார்கோவிலுக்கு வருவதென்றால் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு 10 கிலோ மீட்டர் சுற்றிதான் வரவேண்டி சூழ்நிலையில் உள்ளது.
உடைக்கப்பட்ட சாலையை ஆவுடையார்கோவில் ஒன்றியக் குழுத் தலைவர், ஒன்றிய பொறியாளர் மற்றும் அலுவலர்கள் பார்வையிட்டனர். அவர்களிடம் நெட்டியந்தல் கிராமத்தார்கள் இந்த சாலையை உடனடியாக சாலையை செப்பனிட்டுத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.