புதுக்கோட்டையில் கூடுதல் சார்பு நீதிமன்றம் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி திறந்து வைத்தார்புதுக்கோட்டை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் கூடுதல் சார்பு நீதிமன்றம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சதீஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கூடுதல் சார்பு நீதிமன்றத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் குத்துவிளக்கேற்றினார். தொடர்ந்து கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

முன்னதாக கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்றுகளை நீதிபதி சதீஷ்குமார் நட்டார். மேலும் வழக்கறிஞர் சங்க அலுவலகத்திற்கு சென்று பார்வையிட்டார். தொடர்ந்து மாலையில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் நீதிபதி சதீஷ்குமார் கலந்து கொண்டு பேசினார். 

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர், மகிளா கோர்ட்டு நீதிபதி சத்யா மற்றும் நீதிபதிகள், வக்கீல்கள், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கீதா மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments