புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் செவிலியர்கள் மனு!



புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக செவிலியர்களாக பணியாற்றி வருபவர்கள் பலர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர்.

அவர்கள் மனு தொடர்பாக கூறுகையில், கொரோனா காலக்கட்டத்தில் கருணை அடிப்படையில் தற்காலிகமாக செவிலியர் பணியில் நாங்கள் 60-க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டோம். தொடர்ந்து பணி இருந்து வந்த நிலையில் தற்போது 10 செவிலியர்களை திடீரென நீக்கியுள்ளனர். 

மேலும் அடுத்தடுத்து எங்களுக்கு பணி வழங்கப்பட மாட்டாது எனக்கூறப்படுகிறது. எனவே எங்களுக்கு தொடர்ந்து கருணை அடிப்படையில் பணி வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து மனு கொடுக்க வந்திருப்பதாக தெரிவித்தனர். 

மேலும் கோரிக்கை தொடர்பான மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments