அறந்தாங்கியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம்!அறந்தாங்கியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட தலைவர் ராமசுப்பு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

அறந்தாங்கி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என கோஷம் எழுப்பி பதாகைகளுடன் காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக வந்தனர். 

புதுக்கோட்டை சாலையில் உள்ள சோதனை சாவடியில் இருந்து தொடங்கி பெரியகடை வீதி வழியாக பஸ் நிலையம் காமராஜர் சிலை அருகே முடிவடைந்தது. இதில் கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments