கோபாலப்பட்டிணத்தில் பலத்த காற்றுடன் இடைவிடாமல் பெய்த வரும் மழை.. கொந்தளிப்பாக காணப்பட்ட கடல்.!!


தெற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக் கூடும்.

 இது, வரும் நாட்களில் மேற்கு - வடமேற்கு திசையில் தமிழக கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக 25-ம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல்மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மீமிசல்  அருகே உள்ள  கோபாலப்பட்டிணத்தில்  கடந்த சில  நாட்களாக வெயிலும் அடித்து வருகிறது மழை பெய்தும் வருகிறது.  

இன்று நவம்பர் 25 வியாழன் கிழமை  காலையிலிருந்தே விட்டு விட்டு  மழை பெய்து வந்தது இந்நிலையில் மதியம் 2.30மணி முதல் பலத்த மழை பெய்து வருகின்றது மேலும் கடல் அலை கொந்தளிப்பாக காணப்பட்டது.

வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.சாலைகளில் மழை நீர்  ஓடியது பள்ளமான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. 
கோபாலப்பட்டிணத்தில் அவ்வப்போது கருமேகங்கள் சூழ்ந்து  மலைப்பிரதேசம் போல குளிர் நிலவி வருகிறது.

இதனால்  கோபாலப்பட்டிணம்.பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments