நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னேற்பாடு:புதுக்கோட்டையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு





    
புதுக்கோட்டையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி நடைபெற்றது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிப்பு வெளியகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப அதிகாரிகளும் முன்னேற்பாடு பணியை மேற்கொண்டு வருகின்றனர். 

புதுக்கோட்டை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்படகூடிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் புதுக்கோட்டையில் பழைய நகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த எந்திரங்கள் சரியாக இயங்குகிறதா? என பார்வையிடப்பட்டன.

சரிபார்ப்பு பணி

இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி நேற்று பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இருந்தனர். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவும் நடைபெற்றது. அப்போது நகராட்சி ஆணையர் நாகராஜன், தேர்தல் நேர்முக உதவியாளர் கோவிந்தராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். 
ஒவ்வொரு எந்திரத்திலும் பொத்தானை அழுத்தி சோதனையிட்டனர். தொடர்ந்து எந்திரங்கள் சரிபார்ப்பு பணி நடைபெற்றது.

 மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவுக்காக 662 கட்டுப்பாட்டு எந்திரங்களும, 1,206 வாக்குப்பதிவு எந்திரங்களும் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மழைநீர்

மின்னணுவாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் மழைநீர் புகுந்திருந்தது. அவற்றை அப்புறப்படுத்திய பின் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகள் எடுக்கப்பட்டன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments