வடகாடு ஊராட்சியில் டெங்கு கொசுவை ஒழிக்க கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்!டெங்கு கொசு ஒழிப்புக்கான புகை மருந்து அடிக்கும் பணி வடகாடு ஊராட்சியில் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

வடகாடு ஊராட்சியில் டெங்கு காய்ச்சலால் சிலர் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து இப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று மேலும் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், நடுநிலை பள்ளிகளில் வடகாடு ஊராட்சி மூலமாக மருந்து தெளிப்பான் மூலமாக சுகாதார பணியாளர்கள் உதவியுடன் கொசு மருந்து அடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments