இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு


விடுமுறை நாட்களை ஈடுகட்ட, அடுத்து வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு நேரடியாக சென்று கல்வி கற்கும் சூழல் தடைபட்டது. நேரடி வகுப்புகளுக்கு பதிலாக ஆன்லைன் வகுப்புகள் ஊக்குவிக்கப்பட்டன. இதையடுத்து செப்டம்பர் 1 முதல், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.அதன்பின் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.அதன்பின் தீபாவளிக்காகவும், பின் மழைக்காகவும் விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில், அரசு பள்ளிகளிலும் கற்பித்தல் பணிகளை மேம்படுத்தும் நோக்கில், அடுத்து வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை திறந்து, பாடங்களை நடத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments