புதுக்கோட்டையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கண்டன ஆர்ப்பட்டாம்!புதுக்கோட்டையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நீட் தேர்வு போராட்டக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அண்ணாசிலை அருகே  நடைபெற்ற ஆர்ப்பாட்டதிற்கு  போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் கருப்பையா தலைமை வகித்தார்.

மாணவர்களின் எதிர்கால இலட்சியத்தை சிதைக்கும் வகையிலுள்ள  நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிராக இயற்றியுள்ள சட்டத்திற்கு ஆளுநர் மற்றும் ஜனாதிபதி ஒப்புதல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் நூற்றுக்கணக்கான அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். விரைவில் புதுக்கோட்டையில் அறவழி போராட்டம் தொடங்கப்படும் என்றும் அது மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் போராட்டக் குழு தெரிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments