புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் சீற்றம்: படகுகள் கரைகளில் நிறுத்தம்

   
புதுக்கோட்டை மாவட்ட கடற்பகுதிகளான மீமிசல், கோட்டைப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றமாக இருப்பதால், மீனவா்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்லவில்லை. படகுகள் அனைத்தும் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

வடகிழக்குப் பருவமழையையொட்டி உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தொடா் மழை பெய்து வருகிறது. கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீனவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட கடல் எல்லைப் பகுதிகளான கட்டுமாவடி, கோட்டைப்பட்டினம், மீமிசல் உள்ளிட்ட இடங்களில் கடல் சீற்றத்துடன் உள்ளதாக மீனவா்கள் தெரிவிக்கின்றனா். இதனால், மீனவா்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை. படகுகள் அனைத்தும் கரைகளிலேயே நிறுத்தப்பட்டுள்ளன


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments