திருப்புனவாசல் - ஓரியூர் இடையே போக்குவரத்து துண்டிப்புபுதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை இணைக்கக்கூடிய திருப்புனவாசல்-ஓரியூர் சாலையில் பாம்பாற்றின் தரைப்பாலம் உள்ளது. இந்தப் பாலத்தில் நேற்று முதல் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

 இதையடுத்து, ஆவுடையார்கோவில் நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் இரா.சுந்தர்ராஜ், ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் வெள்ளைசாமி மற்றும் போலீஸார் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர், பொதுமக்கள் ஆற்றைக் கடக்க வேண்டாம் என இரு புறமும் அறிவிப்பு பேனருடன்கூடிய பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

இதனால், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தரைப்பாலத்தை உயர்மட்டப் பாலமாக கட்டிக்கொடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments