மீமிசலில் காவல்துறையை கண்டித்து மாபெரும் சாலை மறியல் மற்றும் கடை அடைப்பு போராட்டம்! ஐக்கிய வர்த்தக சங்கம் அறிவிப்பு!!
மீமிசலில் காவல்துறையை கண்டித்து மாபெரும் சாலை மறியல் மற்றும் கடை அடைப்பு போராட்டம் நடைபெறும் என ஐக்கிய வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் கடந்த 17.09.2021 அன்று 8-க்கும் மேற்பட்ட கடைகளில் தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்றது. மீமிசல் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் மெத்தனபோக்கில் செயல்பட்டதால் மேலும் ஒரு செல்போன் கடையை பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆகவே கடைகளில் தொடர் திருட்டு சம்மந்தமாக நடவடிக்கை எடுக்காத மீமிசல் காவல்துறையை கண்டித்து வருகின்ற 23.11.2021 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணியளவில் மீமிசல் பேருந்து நிலையம் அருகில் மீமிசல் ஐக்கிய வர்த்தக சங்கம் நடத்தும் மாபெரும் சாலை மறியல் மற்றும் கடை அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

இப்படிக்கு
ஐக்கிய வர்த்தக சங்கம் மீமிசல்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments