பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் டிசம்பர் 3-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்



2021 -2022-ம் கல்வி ஆண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித்தேர்வர்களும் (முதன்முறையாக அனைத்து பாடங்களையும் தேர்வு எழுத இருப்பவர்கள்) ஏற்கனவே 2012-க்கு முன்னர் பழைய பாடத் திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும்,
அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை அடுத்த மாதம் (டிசம்பர்) 3 -ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மாவட்டக் கல்வி அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். பயிற்சி வகுப்புகளுக்கு 80 சதவீதம் வருகை தந்த தனித் தேர்வர்கள் மட்டுமே பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர். 

செய்முறை பயிற்சி பெற்ற தேர்வர்கள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு செய்முறைத் தேர்வு நடத்தப்படும் நாட்கள் மற்றும் மையவிவரம் அறிந்து செய்முறைத் தேர்வினை தவறாமல் எழுதிட வேண்டும். 

மேலும் கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளவும். இதற்கான விண்ணப்ப படிவத்தினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அதனை பூர்த்தி செய்து இரண்டு நகல் எடுத்து டிசம்பர் 3-ந் தேதிக்குள் நேரில் ஒப்படைத்தல் வேண்டும் என அரசு தேர்வகள் உதவி இயக்குனர் பிச்சைமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments