பட்டாக் கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம்: ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த இளைஞா் கைது!ஜெகதாப்பட்டினம் அருகே பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பட்டாக் கத்தியால் பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாடியதாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டி மகன் அலெக்ஸ் பாண்டி (வயது 26). இவர் பிறந்தநாளை அப்பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் நண்பர்களுடன் பெரிய பட்டாக் கத்தியை வைத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பிறந்தநாள் கொண்டாடியதாக ஜெகதாப்பட்டினம் போலீசார் அலெக்ஸ் பாண்டி மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த வள்ளியம்மை (70) என்கிற மூதாட்டியை அலெக்ஸ் பாண்டி, சதீஷ்குமார் (22), சரத்குமார் (25) ஆகிய 3 பேரும் சேர்ந்து தாக்கி உள்ளனர். இதுகுறித்து மூதாட்டியின் மகன் கருப்பையா ஜெகதாப்பட்டினம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் 3 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவின்கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments