கோபாலப்பட்டிணம் மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில்  கடலோர மாவட்டங்களில் கனமழைபெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னரே எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக் கடலில் வரும் 9-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், வட தமிழக கடலோர மாவட்டங்களில் 11, 12-ம் தேதிகளில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் 9-ம் தேதிக்குள் கரை திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகில் உள்ள கடற்கரை கிராம்மான  கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.


இது குறித்து  கோபாலப்பட்டிணம் மீனவ சங்கத்தின் தலைவர் M.பஷீர் முகமது,வெளியிடுள்ள அறிவிப்பு

வங்க கடலில் புயல் காற்று வீசக்கூடும் என்பதால்   07-11-2021  ஞாயிற்றுக்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று  மீன்வளத்துறையின் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

தகவல்
பஷீர் முகமது 
மீனவ சங்க தலைவர் 
கோபாலப்பட்டினம்.
புதுக்கோட்டை மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments