குளமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நூதன முறையில் போராட்டம்! சாலை சீரமைக்கப்படாததை கண்டித்து மொய்விருந்து நிதி திரட்ட அழைப்பிதழ்!குளமங்கலத்தில் டெண்டர் விடப்பட்ட சாலை சீரமைக்கப்படாததை கண்டித்து சாலையை சீரமைக்க மொய் விருந்து நடத்தும் போராட்டம் நடத்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி அழைப்பிதழ் கொடுத்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு 4 ரோடு முதல் பிரசித்திபெற்ற பெரிய குதிரை சிலை கொண்ட பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோவில் வழியாக குளமங்கலம் தெற்கு கிராமத்திற்கு செல்லும் சாலை பல வருடங்களாக சீரமைக்கப்படாததால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவாகி இருந்தது. அதனால் பொது மக்கள் போராட்டங்கள் நடத்திய பிறகு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் கடந்த பல மாதங்களுக்கு முன்பு பாரதப்பிரதமர் மேம்பாட்டு நிதியிலிருந்து சாலை சீரமைப்பிற்காக ரூ.2 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக பாலங்கள் கட்டும் பணிகள் முடிந்து பல மாதங்கள் கடந்தும் கூட சாலை பணிகள் நடக்கவில்லை.
அதனால் சாலை பணியை விரைந்து முடிக்க கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வருகிற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை மொய் விருந்துக்கு நிதி திரட்டும் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்து மொய்விருந்து அழைப்பிதழ்களை பொதுமக்களுக்கு கொடுத்து வருகின்றனர். சாலையை சீரமைக்க மொய்விருந்து நடத்தி நிதி திரட்டும் போராட்ட அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments