புதுகை மாவட்ட மீனவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்!மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும சரகத்திற்கு உட்பட்ட ஜெகதாப்பட்டினம், மீமிசல், மணமேல்குடி ஆகிய கடற்கரை பகுதியில் உள்ள மீனவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ராமேசுவரம் மண்டபம் இந்திய கப்பற்படை கமாண்டோக்கள் பிரித், பாவன்ராஜ் உள்பட அதிகாரிகள் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள், சர்வதேச எல்லையை தாண்டி மீன் பிடித்தல் கூடாது. மேலும் கடலில் மீன் பிடிக்க செல்லும்போது மீன்பிடி பாதுகாப்பு கவசங்கள் மற்றும் அடையாள அட்டைகள், மீன்பிடி உரிமம் உள்பட ஆவணங்களையும் எடுத்து செல்லவேண்டும் என எடுத்து கூறப்பட்டது. 

இந்த கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு, சப்-இன்ஸ்பெக்டர் ராமராஜன் மற்றும் மீனவர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments