வருகிற 29-ந்தேதி முதல் இந்தியா-சிங்கப்பூர் இடையே பயணிகள் விமான சேவை மீண்டும் தொடக்கம்!கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா-சிங்கப்பூர் இடையே வணிக ரீதியிலான பயணிகள் விமான சேவை கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் ‘தடுப்பூசி பயணப் பாதை’ (வி.டி.எல்) என்கிற பெயரில் சிறப்பு பயணத்திட்டத்தின் கீழ் வணிக ரீதியிலான பயணிகள் விமான சேவை தொடங்க இருநாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.இந்த சிறப்பு பயணத்திட்டம் வருகிற 29-ந்தேதி முதல் தொடங்குகிறது. 

சென்னை, டெல்லி மற்றும் மும்பையில் இருந்து சிங்கப்பூருக்கு தினமும் 6 விமானங்கள் இயக்கப்படவுள்ளன. வி.டி.எல். பயணத்திட்டத்தின் கீழ் சிங்கப்பூர் வரும் இந்தியர்களுக்கு, கட்டாய தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும். 

இந்தியா-சிங்கப்பூர் இடையே வி.டி.எல். அல்லாத விமானங்களையும் விமான நிறுவனங்கள் இயக்கலாம். ஆனால் அந்த விமானங்களில் பயணிப்பவர்கள் இருநாடுகளிலும் அமலில் உள்ள பொதுசுகாதார கட்டுப்பாடுகளுக்கு உட்பட வேண்டியது அவசியம்.

மேற்கூறிய தகவல்களை சிங்கப்பூரின் சிவில் விமானப்போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments