கோபாலப்பட்டிணம் நெடுங்குளம், காட்டு குளத்திற்கு குளிக்க செல்லும் பொதுமக்களுக்கு GPM மீடியாவின் முக்கிய அறிவிப்பு!!



கடந்த சில மாதமாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நமது ஊர் கோபாலப்பட்டிணத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது. மக்கள் பயன்பாட்டுக்கு உள்ள குளங்கள் மழை நீரால் நிரப்பப்பட்டு, நிரம்பி வழிந்து காட்சியளிக்கிறது.

இத்தகைய சூழலில் கோபாலப்பட்டிணத்தில் உள்ள குளங்கள் தனது முழு கொள்ளளவை எட்டிவிட்டதால், அக்குளங்களுக்கு குளிக்க செல்லும் நாமும் சரி, நம்மோடு அழைத்து செல்லப்படும் நமது வீட்டு சிறு பிள்ளைகளாயினும் சரியே மிகவும் எச்சரிக்கையோடும், கவனத்தோடும் குளிக்குமாறு அன்போடு அறிவுருத்திக்கொள்ளப்படுகிறது.

பிள்ளைகளை வெகு ஆழத்திற்க்கு அழைத்து செல்வதோ, அருகாமையில் குளித்துக்கொண்டிருக்கும் போதோ அவர்களை கண்ணும், கருத்துமாக மிகவும் பாதுகாப்பாக குளிப்பாட்டி அழைத்து செல்லுங்கள் அதுபோக உங்கள் கண் பார்வைக்கு எட்டும் தூரத்திற்க்கே குளிக்க அனுமதித்து அவர்களை மிகவும் எச்சரிக்கையோடு கண்கானித்திடுங்கள். அதுபோக வீட்டிலுள்ள பெரியவர்கள் அல்லாது பிள்ளைகளை தனியாக குளிக்க, குளங்களுக்கு ஒருபோதும் அனுப்பாதீர்கள்.

குறிப்பாக குளத்திற்கு சிறுவர்கள் செல்வதை பெற்றோரும் அப்பகுதி பொதுமக்களும் கண்காணித்து தடுப்பதன் மூலம் உயிரிழப்புகளை தவிர்க்க முடியும். 

வீட்டைவிட்டு வெளியில் செல்லும் குழந்தைகளை நேரம் ஒதுக்கி கண்காணிக்க வேண்டியது பொருப்பாளர்களின் கடமையும் பொறுப்பாகும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments