புதுகை அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகிற டிச.04 தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு வழங்கிட படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பயன்பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் புதுக்கோட்டை அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.

இளைஞர்கள் உரிய மாற்றுசான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, புகைப்படம் மற்றும் தொழிற்பயிற்சி தொடர்பான சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம். 

மேலும் தனியார் தொழில் நிறுவனங்களும் பங்கு பெற்று இளைஞர்களை வேலைக்கு தேர்வு செய்து கொள்ளலாம் என கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments