சிறுபான்மையினர் கல்வி உதவி தொகை பதிவு செய்ய டிச.15 வரை கால நீடிப்பு!இந்திய அரசின் சிறுபான்மையினருக்கான பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்புக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் கல்வி உதவி தொகைக்கு தகுதியான மாணவர்கள் அனைவரும் நவம்பர் 30-க்குள் (செவ்வாய்க்கிழமை) தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் புதுப்பித்து அதற்கான விண்ணப்பத்தினை சம்பந்தப்பட்ட கல்வி நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நவம்பர் 30 இரவு 15 நாட்கள் நீடித்து தேசிய கல்வி உதவித்தொகை இணையமான என்.எஸ்.பி-ல் அறிவிப்பு வெளியாகி உள்ளது. பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இத்திட்டம் குறித்து கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்  சிறுபான்மையினர் நல பிரிவு அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

டிசம்பர் 15ம் தேதிக்குள் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் இனத்தை சார்ந்த மாணவ-மாணவிகள் மேற்படி தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்தில் உரிய காலத்திற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments