முதல் நாள் மனு, அடுத்த நாள் பேருந்து.. ஓரியூர் மக்கள் அனைவரின் சார்பிலும் மனமார்ந்த நன்றி




ஒரியூர் - திருவாடானை வழித்தடத்தில் கோரிக்கை வைத்த ஒரே நாளில் இரண்டு ஆண்டுகளுக்கு  மேலாக நிறுத்தப்பட்ட பேருந்து மீண்டும் இயக்கம்

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் ஓரியூர் கிராமத்தில் உள்ள புனித அருளானந்தர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1500 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு  மேலாக திருவாடனையில்  இருந்து ஓரியூர் வரை இயங்கி வந்த 27 என்ற வழித்தட அரசு பேருந்து திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் கிராமப்புற ஏழை எளிய பள்ளி மாணவர்கள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமலும், கூட்ட நெரிசலில் சிக்கி தனியார் பள்ளியில் தினமும் 20 முதல் 30 ரூபாய் வரை செலவு செய்தும் , பள்ளிக்கு சென்று வர மிகவும் சிரமப்பட்டு இருந்தனர். 

இதனையடுத்து மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் திரு ஆர்எஸ் ராஜகண்ணப்பன் அவர்களிடம் ஓரியூர் ஊராட்சி மன்ற தலைவர் நிரோஷா கோகுல் சார்பாக நிறுத்தப்பட்ட பேருந்தை கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் மீண்டும் பள்ளி நேரத்தில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கை வைத்த ஒரே நாளில் மாண்புமிகு போக்குவரத்துறை அமைச்சர் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் நலன் கருதி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மீண்டும் திருவாடனையில்  இருந்து ஓரியூர் வரையும், ஓரியூரில் இருந்து திருவாடனை வரையும் காலையிலும் மாலையிலும் பள்ளி நேரங்களில் நிறுத்தப்பட்ட பேருந்து மீண்டும் இயக்கப்பட்டது.



இதனையடுத்து  02.12.2021 வியாழக்கிழமை அன்று
நகரிகாத்தான் என்ற கிராமத்தில் ஓரியூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆர்.வெங்கடேசன் உள்ளிட்ட கிராம மக்கள் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இயக்கப்பட்ட பேருந்தை வரவேற்று மாண்புமிகு போக்குவரத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர் எனக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல் ஓரியூர் புனித அருளானந்தர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவியர்கள் ஓரியூர் க்கு வந்த பேருந்தை வா வரவேற்று பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி அமைச்சருக்கு  நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.

இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட பேருந்தை  இயக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்து, முதல் நாள் மனு அடுத்த நாள்  பேருந்தை மீண்டும் இயக்க உத்தரவிட்ட மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் ஐயா, ஆர்.எஸ்.
ராஜகண்ணப்பன் அவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் நிரோஷா கோகுல் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் புலியூர் ஆர்.வெங்கடேசன் உள்ளிட்ட ஊராட்சி கிராம மக்கள் அனைவரின்  சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்
கொண்டனர்.

கிராமப்புற ஏழை மாணவர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக பேருந்து இயக்க உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் Chief Minister of Tamil Nadu தளபதி M. K. Stalin அவர்களுக்கும்,மாண்புமிகு போக்குவரத்துறை அமைச்சர் RS. ராஜகண்ணப்பன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்ட பள்ளி மாணவ-மாணவியர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments