ECR வழியாக மன்னார்குடி - திருச்செந்தூர் இடையே புதிய பேருந்து சேவை தொடக்கம் : டிஆர்பி ராஜா MLA தொடங்கி வைத்தார்



ECR வழியாக மன்னார்குடி - திருச்செந்தூர் இடையே புதிய பேருந்து சேவை தொடக்கம் : டிஆர்பி ராஜா MLA தொடங்கி வைத்தார்.

திருவாரூர்: மன்னார்குடியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நடந்த விழாவில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கலந்து கொண்டு மன்னார்குடி - திருச்செந்தூர் வழித்தடத்தில் (ஈசிஆர் வழியாக) புதிய பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு முதல் புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. தமிழக தொழில் துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா கொடியசைத்து இந்த சேவையை தொடங்கி வைத்தார். மன்னார்குடியில் இருந்து விரைவில் முருகனின் அறுபடை வீடுகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்நிலையில் நிகழ்ச்சியில் மன்னார்குடி நகர மன்ற தலைவர் மண்ணை சோழராஜன், போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மன்னார்குடியில் இருந்து தினமும் இரவு 8.40 மணிக்கு புறப்படும். 

திருச்செந்தூரில் இருந்து தினமும் காலை 9:40 மணிக்கு புறப்படும்.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments