நடுக்கடலில் இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறல்: ஜெகதாப்பட்டினம் சேர்ந்த 14 மீனவர்கள் சிறைபிடிப்பு!



நடுக்கடலில் இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறி வருகிறது. நேற்று புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மேலும் 2 படகுகளுடன் 14 மீனவர்களை சிறைபிடித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதியை சேர்ந்த 8 விசைப்படகுகளுடன் 55 மீனவர்களை இலங்கை கடற்படை நடுக்கடலில் சிறைபிடித்த விவகாரம் தமிழகத்தில் மீனவர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

இதில் 43 மீனவர்கள் இலங்கையின் யாழ்ப்பாணம் சிறையிலும், 12 மீனவர்கள் மன்னார் சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இலங்கையின் இந்த அத்துமீறிய நடவடிக்கைக்கு தமிழகத்தில் கண்டனம் எழுந்திருக்கும் நிலையில், நேற்று மேலும் 2 படகுகள் மற்றும் 14 புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மீனவர்களை இலங்கை கடற்படை நடுக்கடலில் சிறைபிடித்ததாக தகவல் வெளியானது.

கைது செய்யப்பட்டுள்ள அந்த 14 மீனவர்களை யாழ்ப்பாணம் அருகே உள்ள ரணதீவு பகுதியில் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில் இலங்கை கடற்படை இ்ன்னும் 2 மீன்பிடி படகுகளை சிறைபிடித்ததாக உறுதிப்படுத்தாத தகவல்கள் வெளியாகின. இதுவும் மீனவ கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments