கிருஷ்ணாஜிபட்டினத்தில் வீட்டில் பதுக்கிய 1,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!



கிருஷ்ணாஜிபட்டினத்தில் வீட்டில் பதுக்கிய 1,000 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை அடுத்த கிருஷ்ணாஜிபட்டினம் அண்ணாநகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் மணமேல்குடி தாசில்தார் ராஜா தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்று சோதனையிட்டனர்.

அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,000 கிலோ அரிசியை பறிமுதல் செய்தனர். இதனை பதுக்கி வைத்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments