அறந்தாங்கி அருகே விவசாயிகளுக்கு பயிற்சி




அறந்தாங்கி அருகே உள்ள நாகுடியில் நெற்பயிர் மேலாண்மை குறித்து மாவட்ட வேளாண் துணை இயக்குனர் பெரியசாமி தலைமையில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நெற்பயிரில் ஏற்படும் நோய் தாக்குதல் குறித்தும், நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் வம்பன் உதவிப் பேராசிரியர் செந்தில்குமார் விவசாயிகளுக்கு விளக்கினார். மேலும் பாரம்பரிய பூச்சி கட்டுப்பாடு, எந்திர கட்டுப்பாடு, உயிரியல் கட்டுப்பாடு, ரசாயன கட்டுப்பாடு, நெல் சாகுபடி முறை, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை கொள்கைகள், தெளிப்பு சாதனங்களின் வகை மற்றும் தெளிப்பு தொழில்நுட்பம் குறித்தும் விளக்கி கூறப்பட்டது. இதில், வேளாண்மை உதவி அலுவலர் ஜெகதீஸ்வரி, கல்லணை கால்வாய் பாசன விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத்தலைவர் கொக்குமடை ரமேஷ் உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments